kabil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kabil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 டிசம்பர், 2011

காற்பந்தில் இந்தியாவின் நிலை

  பிபா தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து 132வது இடத்தில் உள்ளது.
 'பிபா' தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நிலையில் எந்த வித மாற்றமும் இல்லை.கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையில் நடந்த ஏ.எப்.சி.சாலஞ்சர் கோப்பை போட்டியில் 23வயதுக்குட்பட்ட இந்திய அணியே பங்கேற்றது. எனவே அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்திய சீனியர் அணி எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்காததால் தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை.தொடர்ந்து இந்தியா 132வது இடத்திலேயே உள்ளது.ஆசிய அளவில் இந்திய அணி 22வது இடத்தில் உள்ளது.
 ஆசிய கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் போர்ச்சுகல் நாட்டில் உள்ள லிஸ்பன் ஸ்போர்ட்டிங் அகாடமியில் ஜுன் முதல் 4 மாத காலம் பயிற்சி பெறுகின்றனர். பயிற்சிக்கு முடிந்த பிறகு செப்டம்பர் மாத இறுதியில்தான் இந்திய அணி அடுத்த சர்வதேச ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டுள்ளது.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

சிம்புவின் திறமை

பிரபல பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக்கலைஞர் ரிஹானா ஆகியோருடன் இணைந்து உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் நடிகர் சிம்பு.
இதுவரை லூசுப்பெண்ணே... எவன்டி உன்ன பெத்தான் போன்ற பாடல்களை எழுதி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பும், பெண்கள் மத்தியில் அதிருப்தியையும் சம்பாதித்து கொண்ட சிம்பு, பெண்களையும் திருப்திபடுத்தும் விதமாக, சமீபத்தில் ஒஸ்தி படத்தில் பொண்டாட்டி பாடலை எழுதினார்.
இந்தபாடலை கேட்டு பலரும் தங்களுக்கு வரப்போகிற கணவர் இப்படி இருக்கமாட்டாரா...என்று பெண்களை ஏங்க வைத்தார். இந்நிலையில் இப்போது எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபடி மேலே போய், உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
பிரபல அமெரிக்க பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக் கலைஞர் ரிஹானா ஆகியோருடன் சேர்ந்து இந்த பாடலை உருவாக்கிறார் சிம்பு. 96 மொழிகளில் காதல் என்று பொருள்படும் வார்த்தைகளை இப்பாடலில் பயன்படுத்தி இருக்கிறார் சிம்பு.
96 மொழிகளையும், பல கோடி மக்களையும் இணைக்க, தடைகளை உடைத்து, அனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு என்று சிம்பு சொல்லியிருக்கிறார்.
மேலும் அன்புக்கான பாடலாக, உலகத்தின் அன்பு கீதமாக இந்த பாடல் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.நேற்று வெளியான இப்பாடல், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் தனுஷின் கொலவெறி பாடல், அவரை பிரதமர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இதனால் புகழின் உச்சியில் இருக்கிறார் தனுஷ்.
அதேபோல் சிம்புவும், தனுஷூக்கு நிகராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சி தான், இந்த உலக அமைதி பாடல் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.