வெள்ளி, 18 மே, 2012

உங்களுக்கு காதல பிடிக்காதா சரி -கவிதை ???????பிடிக்கவில்லை என்றாலும் இதை படித்து பார்இதை படித்தால் காதலும் பிடிக்கும் -கவிதையும் பிடிக்கும்

உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்விளங்கும்....
உனக்கும்கவிதை வரும்......
கையெழுத்துஅழகாகும்.....
தபால்காரன்தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !

***தலையணை நனைப்பாய்மூன்று முறைபல்துலக்குவாய்...
காத்திருந்தால்நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னைகவனிக்காதுஆனால்...
இந்த உலகமேஉன்னை கவனிப்பதாய்உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்உருவமில்லா 
உருண்டையொன்றுஉருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி 
இந்த பூக்கள்எல்லாம்காதலை 
கவுரவிக்கும்ஏற்பாடுகள்என்பாய்காதலித்துப் பார்!

***இருதயம் அடிக்கடிஇடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும்ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றிஉனக்குள்ளேஅம்புவிடும்...
காதலின்திரைச்சீலையைக்காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்நைல் நதியாய்ப்பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

***சின்ன சின்ன பரிசுகளில்சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டேசாகவும் 
முடியுமேசெத்துக் கொண்டேவாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...காதலித்துப் பார்!

சனி, 14 ஜனவரி, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்



பழையன கலைந்து
புதியன அணிய
வந்திடும் திருநாளாம்
தைப்பொங்கல்.

வேர்வையினை உழைப்பாக்கி
நம் உண்ண உணவளிக்கும்
உழவனுக்கு விழா எடுக்கும்
பெருநாளாம் இன்று..

பூமியின் அசைவுக்கு மட்டுமன்றி
மனித மனங்களின்
இருளை போக்க
உதித்திடும் சூரிய தேவனுக்கு
நமஸ்காரம் செலுத்திடும்
திருநாள் இன்று

பானைகளில் பொங்கிடும்
நுரை போல
மனித மனங்களில் என்றும்
இன்பம் பொங்கி வழிந்திட
தமிழர் தாயகமெங்கும்
செழுமை பொங்கிட
வாழ்த்துகின்றேன் நானும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

வெள்ளி, 6 ஜனவரி, 2012

ஜீவாவிற்கு வாழ்த்து தெரிவித்த சிம்பு


தமிழ் திரையுலகில் நண்பனின் முன்னோட்டக் காட்சியை பார்த்து விட்டு நடிகர் சிம்பு, நண்பனில் நடிக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் ஆரம்பத்தில் சிம்பு தான் நடிப்பதாக ஒப்பந்தம் ஆனது. ஆனால் பல்வேறு காரணங்களால் சிம்பு படத்திலிருந்து விலகிக் கொள்ள அப்படத்தில் ஜீவா நடித்தார்.
அதன் பின்பு ஜீவா சிம்பு இருவருமே பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசினர். இதனால் இருவரும் எதிரும் புதிருமாகி விட்டனர் என்று ரசிகர்கள் மனதில் கருத்து பரவியது.
இந்நிலையில் சிம்பு தனது டிவிட்டர் இணையத்தில் 'நண்பன்' குறித்து, நண்பன் படத்தின் முன்னோட்ட காட்சிகள் அருமையாக இருக்கிறது. நண்பன் படத்தில் நடிக்காதது குறித்து வருத்தம் அடைகிறேன்.
ஷங்கர் சார் மற்றும் விஜய் அண்ணா இருவரோடும் பணியாற்றும் வாய்ப்பை தவறியதில் வருத்தம். ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இருவருமே அழகாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு நேற்று முன்தினம்(4.1.2012) ஜீவாவின் பிறந்தநாள் அன்று டிவிட்டர் இணையத்தில் சிம்பு, பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதர்.. 'நண்பன்' முன்னோட்ட காட்சிகள் அருமையாக இருக்கிறது. நீங்கள் சுப்பராக இருக்கிறீர்கள். படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
சிம்புவின் பிறந்தநாள் வாழ்த்துக்கு ஜீவா, வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கு முன்னோட்ட காட்சி பிடித்து இருப்பதில் மகிழ்ச்சி. விரைவில் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

கடி ஜோக்ஸ்


1) தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?
ஆபீஸ்லியா வீட்டிலியா...?
2) தாத்தா.. இனிமே கம்ப்யூட்டர் படிச்சாத்தான் வேலை கிடைக்கும்.
அப்ப நீ படிச்சா கிடைக்காதா?
3) ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?
அது வாயில்லா பிராணி சார்...!
4) மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

தோப்புக்கரணம் ஒரு சுவாரஸ்யமான தகவல்


ஒரு சுவாரஸ்யமான தகவல். நாம் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இபிள்ளையார் ந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? Los Angelsஐ  சேர்ந்த மருத்துவர் Dr.Eric Robins இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார்.
அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக் கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார். தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியால் தீர்வு காண முடியும் என ஆராய்ச்சியாளர்கள் 

2011 இன் சிறந்த இணையத்தளம்


2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. Online-ல் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும்.
இந்த தளம் Online-ல் பொருட்களை வாங்க உதவும் தளமாகும். கூகுளிடம் ஒப்பிடுகையில் இந்த தளத்தின் வாசகர் வரத்து குறைவு தான். ஆனால் பொருட்களை வாங்க மொத்த சந்தையாக இந்த தளம் உள்ளதால் தான் கூகுளை காட்டிலும் அதிகம் சம்பாதிக்கிறது.

உன்புருஷன் என்றதில்....!



அன்பே உனைக் கண்ட முதல் நாளே - ஏன்
முன்பே உனைக் காணவில்லை என துடித்தேன்
பெண்மை அது நேர்மை இன்மை என்றிருந்தேன் - ஆனால்
உண்மை நானறிந்தேன் உனைக் கண்ட பின்பே!
அன்பே பெண்ணின் அழகென்று உணர்ந்தேன்
அதனை உன்னன்பில் நானின்று கண்டேன்
நட்பில் உன் கற்பை வியந்தேன் - அதனால்
தப்பேது தெய்வமாய் நீ உயர்ந்தால் !!
அன்பாய் அழகாய் ஒரு பெண்ணைக் கொண்டேன்
அருளாய் இறை எனக்களித்த செல்வமே - எனக்கு
குருவாய் வந்த குழந்தையே - நீ எந்தன்
ஒருதாய் என்றிருக்க கண்டேன்!!!
என்றென்றும் நீ வேண்டும் மானே - நீ
என்றில்லையானால் அன்றே பிரியணும் என்னுயிர் தானே
உன்புருஷன் என்றதில் தானே - நான்
அன்றலர்ந்த செந்தாமரை யானேன்!!!

நண்பன் இசை வெளியீட்டு விழா: இலியானா விளக்கம்


தெரிவித்து
தமிழ் திரையுலகில் நண்பன் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்காத காரணத்தை இலியானா தெரிவித்துள்ளார்.
திரையுலக நாயகி இலியானா தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் திரைப்படமே தோல்வியைத் தழுவ, தெலுங்கு திரையுலகிற்கு சென்று விட்டார்.
தற்போது தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிற இலியானா இளைய தளபதி விஜய்யுடன் நண்பனுடன் இணைந்துள்ளார்.
சமீபத்தில் நண்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழகத்தின் கோயம்புத்தூரில் நடந்து முடிந்தது. இயக்குனர் ஷங்கர், நண்பன் நாயகன்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், அனுயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால் நண்பனின் நாயகியான இலியானாவை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தும் அவரால் கலந்து கொள்ளமுடியவில்லை.
இதுபற்றி இலியானா கூறியதாவது, நண்பன் இசைவெளியீட்டு விழா அன்று எனக்கு கடுமையான காய்ச்சல். ஆகவே என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று 
ள்ளார்.

சனி, 31 டிசம்பர், 2011

மெல்போர்ன் டெஸ்டில் அவுஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோற்றது குறித்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன.
பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இந்திய அணியை, மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி அடிபணிய வைத்து ஆச்சரியமளித்துவிட்டது என்றும் கூறியுள்ளன.
"தி டெய்லி டெலிகிராப்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "பலம் வாய்ந்த வரிசையைக் வரிசையைக் கொண்ட இந்திய அணியின் துடுப்பாட்டம் இப்போது பலவீனமாகியுள்ளது என்பதை தோனியே ஒப்புக்கொண்டுள்ளார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் தாங்கள் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கு இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சச்சின் இன்னும் 100-வது சதமடிக்கவில்லை. 100-வது சதத்தை மீண்டும் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம் அவருக்கு உள்ளது. பிராட்மேன் விளையாடியபோது அவர் ஆட்டமிழந்தால் அதுதான் பத்திரிகை போஸ்டர்களில் முக்கிய இடம்பிடித்தது. "ஹி இஸ் அவுட்' என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் மெல்போர்ன் டெஸ்டில் சச்சின் ஆட்டமிழந்தபோது "இட்ஸ் ஓவர்' என துணைத் தலைப்பிலேயே பத்திரிகைகள் முடித்துவிட்டன.
சச்சின் 100-வது சதத்தை நிறைவு செய்யாவிட்டாலும், அவர் மைதானத்தை விட்டு வெளியேறியபோது பாராட்டுக்கு குறைவில்லை ' என்று கூறியுள்ளது. "மெதுவான ஆடுகளமான இந்திய ஆடுகளங்களில் மட்டுமே இந்திய அணியால் எளிதாக ரன் குவிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது' என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
"சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டுமே அர்த்தமுள்ள ஆட்டத்தை ஆடினார். அவருக்கு 38 வயது என்றாலும், இளம் வீரரைப் போன்று அற்புதமாக விளையாடினார். மற்ற வீரர்களின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. சச்சின் மட்டும் களத்தில் இருந்திருந்தால் 100-வது சதம் மட்டுமல்ல, வெற்றியும் சாத்தியமாகியிருக்கலாம்' என்று "சிட்னி மார்னிங் ஹெரால்டு' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வெற்றிபெற்றுள்ள அவுஸ்திரேலிய அணியை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏராளமான ஊடகங்கள் வெகுவாகப் புகழ்ந்து தள்ளியிருக்கின்றன.

2011ம் ஆண்டில் கொலைவெறி தான் டாப்



நடிகர் தனுஷ் எழுதிப் பாடிய ஒய் திஸ் கொல வெறிடி பாடலை 2011-ன் சிறந்த பாடலாக பிரபல சி.என்.என் தொலைக்காட்சி தெரிவு செய்துள்ளது.
யுட்யூபின் கோல்ட் விருது, டைம் இதழில் கவுரவம், பிரதமருடன் விருந்து சாப்பிடும் பெருமை என அடுத்தடுத்து கொலை வெறி டி பாடலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சி.என்.என் தொலைக்காட்சியின் 2011-ன் டாப் பாடல் என்ற பாராட்டையும் இந்தப் பாடல் பெற்றுள்ளது.
இந்தப் பெருமையைப் பெறும் முதல் தமிழ் பாடல் இது தான் என்பது கூடுதல் பெறுமை.
இதற்கிடயே பிரதமரின் விருந்தில் நேற்று முன்தினம் பங்கேற்ற தனுஷ் இன்று சென்னை திரும்பியுள்ளார்.
இந்த ஆண்டு தனது புத்தாண்டு தினத்தை பெற்றோர் மற்றும் மாமனார் ரஜினியின் ஆசியுடன் தொடங்குவேன் என்று கூறிய தனுஷ் அன்றைய தினம் தன் மனைவி ஐஸ்வர்யா பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள்



2011-ம் ஆண்டு தமிழ் படங்களில் இளம் கதாநாயகிகளின் ஆதிக்கம் பலமாக உள்ளது.
முன்னணி நடிகைகளாக இருந்த நயன்தாரா, திரிஷா, சினேகா, ஸ்ரேயா, தமன்னா போன்றவர்கள் பின்தங்கியுள்ளனர். நயன்தாரா திருமணத்துக்கு தயாராகி நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். நடிகை திரிஷா தெலுங்கில் கவனம் செலுத்தியுள்ளார்.
அனுஷ்கா, அமலாபால், ஹன்சிகா, அஞ்சலி, காஜல் அகர்வால் என பல புது நாயகிகள் இவ்வாண்டில் கலக்கினார்கள். அனுஷ்கா வானம், தெய்வத்திருமகள் படங்களில் வந்தார். ரஜினி, கமலுக்கு ஜோடியாகும் வாய்ப்பும் இவரை நெருங்குகிறது.
முன்னணி கதாநாயகர்களும் அனுஷ்காவுடன் நடிக்க விரும்புகிறார்கள். சுராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாகவும், செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா ஜோடியாகவும், தாண்டவம் படத்தில் விக்ரம் ஜோடியாகவும் தற்போது நடித்து வருகிறார்.
நடிகை ஹன்சிகா மாப்பிள்ளை படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார். பின்னர் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் படங்களில் நடித்து முன்னணி நடிகை பட்டியலில் இருக்கிறார். சிம்புவுடன் வேட்டை மன்னன், உதயநிதி ஸ்டாலினுடன் “ஒரு கல் ஒரு கண்ணாடி” படங்கள் கைவசம் உள்ளன.
நடிகை அமலாபாலுக்கு தெய்வத் திருமகள் படம் திருப்பு முனையாக அமைந்தது. மாதவன், ஆர்யாவுடன் வேட்டை, பழைய நடிகர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை டாப்ஸி ஆடுகளம், வந்தான் வென்றான், என இருபடங்களில் நடித்தார்.
நடிகை காஜல் அகர்வாலுக்கு இவ்வாண்டில் படங்கள் இல்லை. ஆனாலும் பெரிய நடிகர்களான ஆர்யா ஜோடியாக மாற்றான், விஜய் ஜோடியாக துப்பாக்கி படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை லட்சுமிராய், மெகா ஹிட்டான படங்களான காஞ்சனா, மங்காத்தா படங்களில் வந்தார். ஸ்ரேயாவுக்கு ரௌத்திரத்துக்கு பிறகு படங்கள் இல்லை.
சிறுத்தை, வேங்கை படங்களுக்கு பிறகு தமன்னாவிடம் தமிழ் படங்கள் இல்லை. ஸ்ருதி, 7ஆம் அறிவு படம் மூலம் பேசப்பட்டார். தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக '3' படத்தில் நடிக்கிறார்.
அஞ்சலி, கார்த்திகா, அனன்யா, ரிச்சா, ஓவியா, 'கோ'வில் வந்த கார்த்திகா போன்றோரும் 2011-ல் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்களாக இருந்தனர்.
Image by FlamingText.com

ரசனைகளை இழந்து விடாதீர்கள்!

வாழ்க்கை நம்மை உருட்டிக் கொண்டே செல்கையில் எத்தனையோ உன்னதமான தன்மைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம். குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் இருந்த எத்தனையோ ரசனைகள் சொல்லாமலேயே நம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றன. ஒரு காலத்தில் மனதைக் கொள்ளை கொண்ட இயற்கைக் காட்சிகளும், அழகான பாடல்களும் காலப் போக்கில் நம்மில் பெரும்பாலோரால் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ பழைய நினைவுகளாக மட்டுமே அவை தங்கி விடுவது தான் பெரிய சோகம். அந்த ரசனைகளை இழக்கின்ற போது வாழ்க்கையின் அழகையும் சேர்ந்து நாம் இழந்து விடுகின்றோம் என்பதை நம்மில் கணிசமானோர் உணரத் தவறி விடுகிறோம். 

ரசித்த ஒரு தேர்வுத்தாள் நகைச்சுவை...

கடி





”என் காதல் மழை மாதிரி ரொம்ப அழகானது டா”

அப்ப  சீக்கிரம் நீ டாக்டர பார்க்க வேண்டி வரும்!


என்ன சொல்ற?


மழையில நனைஞ்சா ஜல தோஷம் பிடிச்சிடுமே உனக்கு.!!!

ஜோக்

கவிதை

என் முதல் கவிதைகள்
ஒரு குயர் ரூல்டு நோட்டில்
எழுதித் தீர்க்கப்பட்டபின்
முதல் காதலிக்கு சமர்ப்பணம்
செய்து அவளிடமே நீட்டிவிட்டேன்

என் இரண்டாம்கட்ட கவிதைகள்
ஒரு குயர் அன்ரூல்டு நோட்டில்
எழுதித் தீர்க்கப்பட்டபின் 
இரண்டாம் காதலிக்கு சமர்ப்பணம் 
செய்து அவளிடமே நீட்டி விட்டேன்,

பிறகு நான் 
கவிதை எழுதுவதையும் 
விட்டொழிந்து விட்டேன்.

மனைவி வந்த பிறகு
தக்கோளி 1 கிலோ,புளி,
உளுந்தம்பருப்பு,துவரை அரைகிலோ
அஸ்கா ஒரு பாக்கெட் என‌
வெற்றுத்தாள்களில் எனக்கு
கவிதையாய் எழுதி நீட்டுகிறாள்.
வாழ்க்கை கவிதையாய் நகருகிறது.

"உங்கள் காதலிகள் மீது ஏதேனும்
வருத்தங்களுண்டா? என்று
அன்றொரு நாள் கேட்டாள்.
வருத்தம் அவர்கள் மீதல்ல எனக்கு
அந்த ஒரு குயர்
நோட்டுகளின் மீதுதான் என்றேன்.

எனக்கு எப்போது எழுதுவீர்கள்? என்றாள்.
வயிறு உனக்கு புடைக்கிறதே
தெரியவில்லையா? அதுதான் 
உனக்கான என் கவிதை,என்றேன்.

மரணம்

தீவிர சிகிச்சை பெற்ற   2011 அவர்கள் சில மணி நேரத்துக்கு முன்னர் சிகிச்சை பலனளிக்காது 
உயிர் இழந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2012 வீட்டில் நடைபெறுகிறது.
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

எனது வாழ்த்துக்கள்



















என்னை படிச்சவங்களுக்கும்....


என்னைய புடிச்சவங்களுக்கும்...


எனக்கு புடிச்சவங்களுக்கும்...

மற்றும் உங்க எல்லாத்துக்கும்....

முக்கியமா உனக்கும்...!

2012 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
கபில்ராஜ் 

நகைச்சுவை


டாக்டர்! என்னை ஒரு வாரம் நல்லா ரெஸ்ட்டுல இருக்கணும்னு சொல்லிட்டாரு!"
அதுக்கு என்னடா செய்யப்போறே?"
என் பொண்டாட்டியை ஒரு வாரத்துக்கு ஊருக்கு அனுப்பி வைக்கப் போறேன்."